islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சாத்தான் ஓதும் வேதம் - ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி


ஊழலுக்கும், கறுப்பு பண பதுக்கலுக்கும் எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தம் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி ஆகும்.

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் பதஞ்சலி யோகாபீட அறக்கட்டளையின் கீழ் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. தனது யோகா வகுப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அஸ்தா டி.வி என்ற தொலைக்காட்சி சேனலும் இந்த யோகா குருவுக்கு சொந்தம்.

தனிமையில் தியானம் நடத்துவதற்காக ஸ்காட்லாந்தில் கும்ப்ரே தீவை இரண்டு மில்லியன் ஃபவுண்டிற்கு சொந்தமாக்கியுள்ளார் பாபா ராம்தேவ். பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளை மட்டுமல்ல கூடவே திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளை,பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியன ராம் தேவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

யோகாபீட அறக்கட்டளையின் தலைமையகத்தில் 300 படுக்கைகளை கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பதஞ்சலி யோகா ரிசர்ச் செண்டர், ஆயுர்வேத கல்லூரி, ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம், இயற்கை உரத்திலான விவசாய தோட்டம், உணவு-மருந்து பூங்கா ஆகியன உள்ளன. சார்ட்டர் செய்த விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும்தான் பாபா பயணிப்பார்.

ஹரியானா மாநிலத்தில் மஹேந்திரவர் மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாத விவசாய தம்பதிகளான யாதவ்-குலாப்தேவி தம்பதிகளின் மகனாக பிறந்த ராமகிருஷ்ண பாபா ராம்தேவாக வளர்ந்தது அதிசயத்தக்க வேகத்திலாகும். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ராமகிருஷ்ணா சம்ஸ்க்ருத மொழியையும், யோகாவையும் படித்து சன்னியாசியாக மாறி பாபா ராம்தேவாக பெயரை மாற்றினார்.

தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 1100 கோடி என ராம் தேவ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை விட பல மடங்கு சொத்துக்கு ராம் தேவ் சொந்தக்காரர் என கருதப்படுகிறது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ராம்தேவிற்கு 80 ஆயிரம் யோகா பயிற்சி மையங்கள் உள்ளன.நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துடன் யோகா குரு ராம்தேவிற்கு தொப்புள்கொடி உறவு உண்டு. ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சிகளில் யோகா பயிற்சியாளராக ராம்தேவ் தோன்றுவார். தீவிரவாத குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு வெட்ட வெளிச்சமானபோது ஆர்.எஸ்.எஸ்ஸை பகிரங்கமாக நியாயப்படுத்தி பேசியவர் இந்த பாபா ராம்தேவ்.

ராம் தேவின் சொத்துக்கள் மற்றும் அவரது வருமானம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி அகில் பாரதீய அகண்ட பரிஷத் குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் புகார் மனு அளித்திருந்தது.

ராம் தேவின் ஃபார்மஸியில்(மருந்தகம்) மருந்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டை மருந்துகளின் பரிசோதனை அறிக்கை உள்பட சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் வெளிக்கொணர்ந்தார்.

திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளையின் திவ்ய ஃபார்மஸியில் எய்ட்ஸிற்கும், கான்ஸரிற்கும் மருந்து அளிக்கப்பட்டிருந்தது. யோகாவில் இந்த நோய்கள் குணமடையும் என ராம் தேவ் உரிமை கோரியிருந்தார். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மத்திய சுகாதார அமைச்சகம் ராம்தேவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து நோய் குணமடையும் என தான் கூறவில்லை எனவும், குணமடைந்தவர்கள் கூறுகிறார்கள் என ராம்தேவ் பல்டி அடித்தார்.

ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்துள்ள இந்த பாபா ராம்தேவ் இன்று ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என கிளம்பியுள்ளார்.இதுதான் சாத்தான் ஓதும் வேதம் என்பதோ?

No comments:

Post a Comment