islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இத்தாலியில் பர்தா அணிவதற்கு தடை


முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடைக்கு பெல்ஜியம், பிரான்ஸ் தடை விதித்து உள்ளது. அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது.


முகத்தை மூடும் பர்தா ஆடைகளால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது என தடைவிதிக்கும் நாடுகள் கூறுகின்றன. கோடைகால விடுமுறைக்கு பின்னர் பர்தாவுக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என இத்தாலி நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது.

இத்தாலியின் மத்திய வலது கூட்டணியான பிரதமர் பெர்லுஸ்கோனி அரசு இந்த பர்தா தடைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி அரசியலமைப்பு விவகார கமிட்டி கூறுகையில், "இந்த பர்தா தடை மசோதா கருத்தை முதலில் குடியேற்றத்திற்கு எதிரான வடக்கு லீக் அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்த தடைச்சட்டம் குறித்து செப்டம்பர் மாதம் விவாதிக்கப்படும்" என தெரிவித்தது.

பெர்லுஸ்கோனிக்கு இத்தாலி நாடாளுமன்றத்தின் மேல் மற்றும் கீழ் சபைகளில் பெரும்பான்மை உள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் இத்தாலியில் பர்தா அணிய தடைவிதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

பிரான்சில் இந்த ஆண்டு துவக்கத்தில் பர்தா ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தாலியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர். இருப்பினும் முஸ்லிம் பெண்கள் முழு பர்தா அணிவது மிக அரிதான ஒன்றாகவே உள்ளது.

No comments:

Post a Comment