islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!


கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தமிழக தவ்ஹீது ஜமாத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


நேற்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நகர செயலாளர் காஜாமூகைதீன், மாணவர் அணி செயலாளர் ரமீத்ஹசன் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி சமீம் மற்றும் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

நேற்று ரமலான் நோன்பு துவக்க நாள் என்பதால் முஸ்லீம்கள் நோன்பு வைத்திருந்தனர். இரண்டுபேர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நகராட்சி பகுதி முஸ்லீம்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் அவர்களை விட்டுவிடுவதாகக்கூறி அனைவரையும் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.

எனினும், காவல்துறையினர் உறுதியளித்தபடி அவர்களை விடுவிக்காததால் மீண்டும் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. காவல்துறையினர் அவர்களைக் கலைந்து செல்ல உத்தரவிட்டும் யாரும் கலைந்துபோகவில்லை. இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment