islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சிறுபாண்மை மக்களுக்கு எதிராக பீகார் அரசின் காவி சிந்தனை


ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் எட்டு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில்ஆர்.எஸ்.எஸ்ஸின் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஹிந்துத்துவத்தை புகழும், சங்க்பரிவார தலைவர்களை வாழ்த்தும் புத்தகங்களை நிதீஷ்குமாரின் அரசு பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.



ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேசவபல்ராம் ஹெட்கோவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் உள்ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸை அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம். சங்க்பரிவார அரசியலை அறிமுகப்படுத்தும் ஹிந்துத்துவாவும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் ’கோத்ரா – தி மிஸ்ஸிங் ரேஜ்’ ஆகியன இதர முக்கிய புத்தகங்களாகும்.

மாணவர்களிடையே மதச்சார்பின்மையையும்,ஒற்றுமை உணர்வையும்போதிக்கவேண்டிய கல்விதிட்டம்
இப்புத்தகங்களால் மாணவர்களிடையே துவேஷத்தையும், தாக்குதல் வாசனையையும் உருவாக்கவும் உதவும் என ஜனதாதள எதிர்ப்பு தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான உபேந்திரா குஷ்வாஹ குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்பந்த அரசியலுக்கு அடிபணிந்து மதசார்பற்றக் கொள்கையை பீற்றிக்கொள்ளும் நிதிஷ்குமார் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களை படிக்க வைத்துள்ளார் எனவும், அபாயகரமான இந்த முயற்சியிலிருந்து அரசு உடனடியாக வாபஸ்பெறவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 புதிய அரசியல் கட்சியான பீகார் நவநிர்மாண் மஞ்சின் கண்வீனராகவும் உபேந்திரா உள்ளார்.

கர்னாடகாவில் பகவத்கீதையை பாடத்திட்டமாக்க கர்னாடக அரசு முயற்சித்து வரும் வேளையில் பீகாரில் இருந்து வரும் இதுபோன்ற செய்திகள் நடுநிலையாளர்களை கவலை கொள்ளச்செய்துள்ளது.

 உடனே மத்தியில் உள்ள அரசு இதுபோல் மத விஷயங்களை கல்விக்கூடங்களில் புகுத்த முயற்சிக்கும் காவிசிந்தனை உள்ள மாநில அரசுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உடனே தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது நடு நிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

மதசார்பற்ற இந்திய நாட்டில் இது போன்ற செயல்கள் எதிர் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்பத்தி விடும் என்பதை மக்களை ஆள்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அ.அப்துல் வஹாப்,சேலம்.


No comments:

Post a Comment