சீனாவில் நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோய் கிருமி அதிகரித்து வருவதையொட்டி, நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட இருக்கிறது.
முதல் கட்டமாக குவாங்டாங்க் மாநிலத்தில் ஜியாங்மன் நகரில் நாய் வளர்ப்பவர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் நாய்களை கொன்று விட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
தவறினால் நாய்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்படும் என்று அந்த மாநில அரசாங்கம் அறிவித்து உள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற உத்தரவு, ஷாங்காய், ஜியாங்காய், ஷின்கூய், பென்ஜியாங் ஆகிய நகரங்களிலும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜியாங்மன் நகரில் மட்டும் 30 ஆயிரம் நாய்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நாய் கடித்ததால் 42 பேர் பலியானார்கள்.12 ஆயிரத்து 14 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் தான் இத்தகைய நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு உள்ளது.
’’செல்லப்பிராணியை பிரிய முடியாத நபர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் நாய்களை விட்டுவிட்டு, அங்கு வந்து பார்த்துச் செல்லட்டும்’’ என, அரசின் தரப்பில் ஒரு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment