பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.
சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார்.
அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது. நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார்.
தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைய அரும்பாடுபட்ட எடியூரப்பா, கர்நாடகாவின் முதல் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். ஒவ்வொரு முறையும், மேலிட தலைவர்களின் ஆதரவுடன் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார். லோக் ஆயுக்தா அறிக்கை வெளியானவுடன், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் முடிவு செய்து, எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி கட்டளையிட்டனர்.

எடியூரப்பா, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே என்ற கிராமத்தில், 1943, பிப்., 27ம் தேதி பிறந்தார். 1970: சிக்கரிபுர் என்ற பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயலராக நியமிக்கப்பட்டார். 1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார். 1975: சிக்கரிபுர் நகராட்சி தலைவராக தேர்வானார். 2010 நவ., : அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது, "லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம் சாட்டியது. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி உத்தரவிட்டது. குற்றச்சாட்டு: சுரங்க ஊழல் தொடர்பாக, கர்நாடக மாநில அரசிடம் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, "சுரங்க நிறுவனங்களிடம் இருந்து எடியூரப்பா குடும்பத்தினர், 30 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர்' என, தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடரவும் பரிந்துரை செய்தார்.
No comments:
Post a Comment