விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ் லிம்கள்
தங்கள் வணக்க வழிபா டுகளை நிறைவேற்றிக் கொள்வ தற்காக நவாப் ஆட்சிக் காலத்தில் ராவுத்த நல்லூர் கிராம எல்லை யில் ஒரு ஏக்கர் 19 செண்ட் நிலம் ஆற்காடு நவாபினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி இரண்டு கிராம முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இரண்டு கிராமத்தின் மையத்தில் புதிய பள்ளி வாசல்கள் உருவாகிவிட்டபடியால் நவாப் பள்ளிவாசலின் பயன்பாடு குறைந்து போனது.
இதனால் அருகிலுள்ள ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடத் தின் மீது சொந்தம் கொண்டாடினர். திடீரென்று அந்த இடத்தில் விநாயகர் சிலையையும் வைத்து விட்டனர். இதனால் புதுப்பேட்டை கிராம முஸ்லிம்கள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த னர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் ராவுத்தநல்லூர் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் நவாப் பள்ளிவாசலை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பள்ளிவாசலை போட்டோ எடுத்தனர்.
இந்த தகவல் ஆதி திராவிடர் தரப்பிற்கு தெரிய வந்ததும் இரவோடு இரவாக நவாப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிதாக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமத்து முஸ்லிம்களும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
காவல்துறையிடம் இரு தரப் பாரும், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று முறையிட்டதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடம் மயானப் புறம்போக்கு இடம் என்றும், மேலும் அந்த இடத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் விசாரணை யில் தெரிவித்தனர்.
புதுப்பேட்டை ஜமாஅத்தினர் அந்த இடம் வருவாய்த்துறையினரின் பதிவேடுகளில் 1983வரை பள்ளிவாசல் என்றுதான் குறிப் பிட்டிருந்தது. இடையில் மயானப் புறம்போக்கு என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலை எதுவும் செய்யக்கூடாது என்றும், அதற்கு பாதையையும் ஒதுக்கித் தரவும், ஒத்துக் கொண்டு ஆதி திராவிடர் தரப்பி னர் உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை மீறி பள்ளிவாசலை இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் அந்த இடத்தை ஆதி திராவிடர் எழுதி வாங்கியபோது, "இந்த நிலத்தை ஆதி திராவிடர் பயன்படுத்துவது குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
இறுதியில் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆதி திராவிடர் கொடுத்த பணத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் திரும்ப கொடுத்து விட வேண்டும்; அந்த நிலத்தின் ஓரமான ஒரு பகுதியை ஆதி திராவிடர் பயன்படுத்திக் கொள்வது என்றும் கடந்த 17ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆதி திராவிடர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் கடந்த 17ம் தேதி முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த முயற்சித்தனர். ஆனால் ஆதி திராவிடர்கள் திரண்டு வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அமை திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. அந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக வக்ஃபு போர்டுக்கு கடிதம் எழுதி முடிவைப் பெறுவது என்றும், அரசின் மறு உத்தரவு வரும்வரை இரு தரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையி னால் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், மீண்டும் எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஜமாஅத் முக்கியஸ்தர்கள் இத னால் அமைதியடைந்த போதி லும் முஸ்லிம் இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்ப ட்டு விட்டதாகவே குமுறுகின்றனர்.
1. பள்ளிவாசல் இடத்தை விற்பதற்கு ஜமாஅத்திற்கு யார் உரிமை அளித்தது?
2. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் ஒரு சிலர் மட்டும் முடிவெடுத்தது இடத்தை விற்பனை செய்தது எப்படி நியாயமாகும்?
3. பள்ளிவாசலை இடித்தவர் களை இன்றைய தேதி வரையில் போலீசார் கைது செய்யாதது ஏன்?
4. பள்ளிவாசல் இடத்தில் சட்ட விரோதமாக வைத்துள்ள விநாயகர் சிலையை அகற்றாதது ஏன்?
இளைஞர்கள் கேட்கும் இந்தக் கேள்வி களில் நியாயம் இருப் பதை மறுப்பதற்கில்லை.
அயோத்தி பாபர் பள்ளி வாசல் ஆக்கிரமிப்பிற்கும் - விழுப்புரம் ராவுத்தநல்லூர் நவாப் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கும் இடை யில் சின்ன வித்தியாசம்தான். பாபர் பள்ளிவாசலில் முதலில் சிலை வைத்தார்கள். பிறகு இடித்து தரைமட்டமாக்கினார்கள். நவாப் பள்ளிவாசலை முதலில் தரைமட்டமாக்கி விட்டு பிறகு சிலை வைத்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் காவல்துறை, பள்ளிவாசலை இடித்தவர்கள் துணிவுடன் சுற்றித் திரிந்து வருவதைப் பார்த்துக்க கொண்டு அவர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இதனை மீட்க வேண்டும். இல்லையென்றால் சங்கராபுரம் பகுதியில் 40 ஏக்கருக்கும் மேல் வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றின் நிலையும் கேள்விக் குறியாகி விடும்!
No comments:
Post a Comment