மொனாக்கோவில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்து உலகின் விலை உயர்ந்த விபத்தாக கருதப்படுகிறது. ரூ.5 கோடி மதிப்புள்ள கார்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.
பிரான்ஸ் அடுத்த மொனாக்கோ நாட்டில் உள்ள நகரம் மான்ட் கர்லோ. சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள பரபரப்பான சாலையில் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருந்தன.
பிளேஸ் டூ என்ற விடுதியின் அருகே உள்ள சிக்னலில் சிவப்பு விழுவதற்குள் சென்று விடலாம் என்ற தைரியத்தில் ஆக்சிலேட்டரை அழுத்தினார் பென்ட்லி அஸூர். இது இங்கிலாந்தின் பென்ட்லி நிறுவனத்தின் தயாரிப்பு. விலை சுமார் ரூ.1.8 கோடி.
அதே சிக்னலில் முந்திக் கொள்ள நினைத்த மெர்சிடஸ் எஸ் கிளாஸ் காரின் பக்கவாட்டில் இடித்தது பென்ட்லி. மெர்சிடஸ் விலை சுமார் ரூ. 54 லட்சம்.
அதோடு நிற்காமல் எதிரே வந்த பெராரி எப்480 மீதும் மோதியது.
இதன் விலை ரூ.1.03 கோடி.
வேறு திசையில் இருந்து வந்த ஆஸ்டன் மார்ட்டின்(ரூ.1.08 கோடி), போர்ஷ்(ரூ.57.6 லட்சம்) ஆகிய கார்களும் இந்த கார்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. பளபள சொகுசு கார்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்பதை மொத்த கூட்டமும் திரண்டு வேடிக்கை பார்த்தது.
உலக அளவில் விலையுயர்ந்த கார்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் பென்ட்லி, மெர்சிடஸ், பெராரி, ஆஸ்டன் மார்ட்டின், போர்ஷ் ஆகியவை மோதிக்கொண்டது அரிய சம்பவமாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment