islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பிரிட்டனில் அதிகரிக்கும் நெருப்புக் கோழி முட்டைக்கான மவுசு


இங்கிலாந்தில் நெருப்பு கோழி முட்டைக்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஒரு முட்டை 19.95 பவுண்ட்சுக்கு விற்கப்படுகிறது.


பறவைகளில் நெருப்பு கோழியின் முட்டைதான் பெரிதாக கருதப்படுகிறது. சுமார் அரை அடி உயரம், ஒன்றரை அடி சுற்றளவு இருக்கும்.

பெரிய சைஸ் முட்டைக்கோசுக்கு இணையாக ஒரு முட்டையே 2 கிலோ இருக்கும். இங்கிலாந்தில் தற்போது நெருப்புக் கோழி முட்டை விற்பனையில் பெரிய நிறுவனங்களும் இறங்கியுள்ளன.

இங்கிலாந்தின் ஹெடிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டது வெயிட்ரோஸ் நிறுவனம். பேக் உணவு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம்.

இது நெருப்பு கோழி முட்டையை தற்போது பேக் செய்து விற்க தொடங்கியிருக்கிறது. ஒரு முட்டை விலை 19.95 பவுண்ட்ஸ் ஆகும். வெளிப்புற சூழ்நிலை வெப்பமாக இருக்கும் போது மட்டுமே நெருப்பு கோழி முட்டையிடும்.

இங்கிலாந்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரை முட்டை சீசன். நெருப்பு கோழியின் ஒரு முட்டையான கோழி முட்டை போல 24 மடங்கு பெரியது. இதன் ஒரு முட்டையை வைத்து 15 பேருக்கு ஆம்லெட் போடலாம் என்கின்றனர் வெயிட்ரோஸ் நிறுவன அதிகாரிகள்.

இங்கிலாந்தை சேர்ந்த பெண் மாண்டி என்பவர் கூறுகையில்,"கோழி, வாத்து முட்டையை விட நெருப்பு கோழி முட்டை ருசி அதிகம் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. பீங்கான் கோப்பை போல முட்டையின் ஓடு உறுதியாக இருக்கிறது. டிரில்லிங் மெஷினால் துளைத்தால்கூட சிறிது நேரம் தாக்குப்பிடித்த பிறகே ஓடு உடைகிறது" என்றார்.

No comments:

Post a Comment