islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய் மொழியைக் கற்க புதிய ஏற்பாடு: கருணாநிதி அறிவிப்பு




மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய் மொழியைக் கற்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.



இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக்கப்பட்டு 2006-ல் சட்டம் இயற்றப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டு தமிழகத்தில் வளர்ந்து வரும் மொழிவழிச் சிறுபான்மையினர், தமது பிள்ளைகள் தமது தாய் மொழியைக் கற்பதற்கு வாய்ப்பில்லை என்று முறையீடு செய்தனர்.

அதன் அடிப்படையில், மொழிவழிச் சிறுபான்மையினர் தமது தாய் மொழியை ஒரு பாடமாக கூடுதலாகப் படித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இப்படி குறைந்தபட்ச மதிப்பெண் தேவையில்லை என்றால், மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தமது தாய் மொழியைப் படிப்பதில் தேவையான கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும், எனவே, இதை மாற்றி அமைத்திட வேண்டும் மொழிவழிச் சிறுபான்மையினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. மொழிவழிச் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கற்பதோடு, கூடுதலாக உருது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தமது தாய் மொழியையும் ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என்றும், தேர்ச்சி பெறுவதற்கு தமிழ்ப் பாடத்துக்கு நிர்ணயித்து இருப்பதைப் போன்று குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
source;dinamani

No comments:

Post a Comment