islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இணைய தளம் என்கின்ற கத்தி ..!!


                                      
                                           


             இணைய தளம் என்கின்ற  கத்தி ..!!


இணைய தளங்களை பயன்படுத்துவது என்பது கத்தியை கையாள்வது போல் மிகவும் கவனமாக கையாளப்படடவேண்டும், இல்லையேல் அதைக்கையாள்பவர்களையே பதம் பார்த்து விடும் என்பது உண்மை.

இன்றைக்கு இணயதளங்களை பயன் படுத்துவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களின் அளவும் அதிகமாகிக்கொண்டே உள்ளன.

கல்லூரி மாணவ மாணவியர், பள்ளி மாணவ மாணவியர் முதற்கொண்டு ஓரளவு படித்த, சிறிதளவு ஆங்கில அறிவுள்ள குடும்பபெண்கள் கூட இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்தத்துவங்கியுள்ளனர். ஏனென்றால், இணையதளங்கள் வாயிலாக ஏராளமான நன்மைகளும் உள்ளன.

வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாக நம்முடைய நாட்டிலும் சரி பிற நாடுகளிலும் சரி, ரேசன் கடை முதற்கொண்டு வங்கி, மின்சாரத்துறை அலுவலகம், பேருந்து முன் பதிவு, ரயில்வே முன்பதிவு, பாஸ்போர்ட் அலுவலகம் என எந்த வேலையானாலும் வரிசையில் நின்று அந்த வேலையை முடிப்பதற்கு இந்த அவசர யுகத்தில் முடிவதில்லை.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணைய தள இணைப்பின் மூலமாக இந்த வேளைகள் அனைத்தையும் வீட்டிலிருந்தவாறே விரைவாக முடித்துவிட முடியும்.

மேலும் இணையதளங்களின் வாயிலாக நம்முடைய மார்க்கத்தை விளங்கிக்கொள்ளவும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லவும், தாஃவா செய்வதற்கும் கூட இணைய தளங்களை பயன்படுத்துகிறோம்.

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவைப்பெறவும், கல்வி கற்றுக்கொள்ளவும், அறிவைப்பெருக்கிக்கொள்ளவும் கூட இணைய தளங்கள் பயன்படுகின்றன. இன்னும் ஏராளமான பயங்களும் உண்டென்றாலும், இதன் மூலம் ஏற்படக்கூடிய தீங்குகளும் இதற்கு சற்றும் குறையாமல் இணைய தளங்களில் உள்ளதுதான் வேதனை.

இணைய தளங்களில் யார் வேண்டுமானாலும் புதிதாக கணக்கு துவங்கி தனக்கு தெரிந்த தகவல்களை பதிவேற்றம் செய்து, சேமித்து வைத்துக்கொண்டு பரப்பவும் முடியும். அதனால், ஒரு சில வக்கிர எண்ணம் கொண்ட காசுக்காக உடலை விற்கும் ஆண்களும், பெண்களும் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து, அதைக்காண்பவர்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை கொள்ளயடிப்பதும், ஒரு சில இலவச இணைய தளங்களால் வளர்ந்து வரும் இளய பருவத்தினரிடையே ஆபாச, வக்கிர எண்ணங்களை புகுத்தி சமுதாயத்தை சீரழித்தும் வருகின்றனர்.

இதுவல்லாமல், ஃபேஸ்புக், டுவீட்டர் மற்றும் எண்ணற்ற பெயர்களில், சமூக இணையதளங்கள் என்ற போர்வையில் உலகளாவிய நட்பை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மக்களிடையே உலா வந்துகொண்டிருக்கின்றன.

இது போன்ற இணையதளங்களில் கணக்கை துவக்குபவர்கள் தங்களுடைய பெயர், வயது, புகைப்படம், மற்ற தகவல்கள் அனைத்தையும் உண்மையானதை தருகின்றார்களா? என்றால் இல்லை என்பதே உண்மை.

இந்த தவறான தகவல்களை பார்த்து  உண்மை என நினைத்து நட்பு, காதல் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இது தவறான தகவல் என தெரிய வரும்போது தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகின்றது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி முர்மு. இவருக்கு வயது 22. இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சில நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையில் முடங்கி கிடந்தார். 19.09.2011 அன்று மாலை அவரது தோழிகள் வந்து பார்த்தபோது, அறையின் கதவு பூட்டிக்கிடந்தது. பல முறை தட்டியும் திறக்காததால், காவலாளிகள் கதை உடைத்தனர். உள்ளே மாலினி முர்மு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இணையதளத்தின் மூலம் அவர் வாலிபர் ஒருவரை தீவிரமாக காதலித்ததும், அவருடனான உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே, மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்கொலைக்கு முன்பு அந்த வாலிபருக்கு இணையதளம் மூலம் மாலினி எழுதியுள்ள கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் ஐஐஎம் கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்கொலைக்கான காரணத்தை தனது லேப்டாப்பில் மாலினி குறித்துவைத்துள்ளார். தனது நண்பர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாலினி அந்த அறையில் வேறு மாணவிகளின் துணை இல்லாமல் தனியாகத்தான் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரில்தான் அவரது நண்பரும் இருந்துள்ளார் என்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவர்கள் பிரிந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் மூலம் போலீசார் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் அந்த நண்பர் மாலினியைப் பிரிவது குறித்து கருத்து தெரிவிக்கையில், என்னுடைய கேர்ள்ஃபிரண்டை விட்டு விலகிவிட்டேன். இன்று சுதந்திரமான நாளாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஃபேஸ்புக்கில் ஒருவர் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் நண்பர்களாக பெற்றுக்கொள்ள முடியும் இந்தப்பெண்ணுக்கு 726 நண்பர்கள் ஃபேஸ் புக் மூலமாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவருக்கு இன்போஸிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்து இந்த வருட இறுதியில் பணியில் சேர இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, தங்களுடைய பிள்ளைகளை படிக்கவைக்கக்கூடிய பெற்றோர்கள் சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி இஸ்லாமிய முறைப்படி வளர்த்து, தங்களுடைய கண் பார்வையிலேயே வைத்து படிக்கவைக்கக்கூடிய நிலையில் மட்டுமே படிப்பை வைத்துக்கொள்ள வேண்டும்.  நன்றாக படித்து நல்ல வேளையில் சேர வேண்டும் என நினைத்து இஸ்லாம் கூறும் முறைப்படி இல்லாமல் காசு பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படிக்கவைத்தால் இது போன்ற இஸ்லாம் தடை செய்துள்ள கேவலமான நிலைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியாமலும் போகலாம்.

இதுபோன்ற இணய தளங்கள் வாயிலாக யூதர்களும்,கிருஸ்தவர்களும் இஸ்லாத்தைப்பற்றியும், இஸ்லாமியர்கள் பற்றியும் தவறாக சித்தரிக்கக்கூடிய போக்கும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இணயதளங்களில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப்பற்றிய கேலிச்சித்திரங்கள், ஆபாசமாகவும், அறுவறுப்பாகவும் பல விதங்களிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமியர்கள் யாரும் யூதர்கள் பற்றியோ,கிருஸ்தவர்கள்பற்றியோ மற்ற மதத்தவர்கள்பற்றியோ தவறான தகவல்களை பரப்புவதில்லை,காரணம், இறைவன் தனது திருமறையில் மற்ற மதத்தவரை நிந்திப்பதை இஸ்லாமியர்களுக்கு தடை செய்துள்ளான்.

இதுபோன்று இஸ்லாத்தைப்பற்றி ஒரு சில இணையதளங்கள் வாயிலாக தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதால் பாகிஸ்தானில், மத வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ள பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களை பாகிஸ்தானில் யாரும் பயன்படுத்தக்கூடாது என லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாகூர் நீதிமன்ற நீதிபதி ஷேக் அஜ்மத் சயீத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனினும் கூகுள் மற்றும் இதர தேடுதளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டாம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பேஸ்புக் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பேஸ்புக்கில் முகமது நபிக்கு எதிராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதால் அதை முற்றாக தடை செய்ய வேண்டும் என முகமது அசாத் சித்திக் என்ற பாகிஸ்தான் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களை அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சகம் முற்றாக தடை செய்துவிட்டது. இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது குறித்து அக்டோபர் 6 ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணயதளங்களை நாம் எவ்வாறு பயன் படுத்துகிறோமோ அதற்குத்தக்க பலன் நிச்சயம் உண்டு, நல்ல விதத்தில் பயன் படுத்தி, நல்லவிஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ளும் போது யாரெல்லாம் அதை படித்து பின்பற்றுகின்றார்களோ அவர்களின் நன்மைஅளவுக்கு நமக்கும் கிடைக்கும். எனவே, இணையதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தி நன்மையை அதிகமதிகம் பெற்றுக்கொள்வோமாக!!.


அ,அப்துல் வஹாப், சேலம்,

No comments:

Post a Comment