islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழகம் - ஹஜ் பயண விபரங்கள் வெளியீடு

                                        
இந்த வருடம் மொத்தம் 4088 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள செல்கின்றனர் என அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.
இவர்களில் தமிழகத்திலிருந்து சுமார் 3818 பயணிகளும், புதுவையில் இருந்து 59 பயணிகளும், அந்தமானில் இருந்து 29 பயணிகளும் செல்கின்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமது ஜான் தலைமையில் "ஹஜ் 2011 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்" சென்னை எழும்பூரில் நடந்தது. இதற்கு அரசு செயளாலர் சந்தானம், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அமைச்சர் முகமது ஜான் பேசியதாவது: இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் 1.25 லட்சம் பேர் மேற்கொள்ள உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர் மனு செய்திருந்தனர்.

ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 3057 ஆகும். இந்த இடத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பயனாய் கூடுதலாக 761 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இருந்து 3818 பேர் புனித பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் பெண்கள் 1893 பேர் அடங்குவர்.

மேலும் புதுச்சேரியில் இருந்து 59 பேரும், அந்தமானை சேர்ந்த 29 பேரும் சேர்த்து சென்னையில் இருந்து  ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பயணிகள் ஜெட்டா செல்வதற்கு 14 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முதல் விமானம் அக்டோபர் 17ம் திகதி புறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து விமானங்களும் அக்டோபர் 31ம் திகதிக்குள் இயக்கப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment