islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மதக்கலவரத்தையும் சாதிகலவரத்தையும் உருவாக்கி உயிரை பலி வாங்கும் பிள்ளையார்!


                                         
விநாயகர் சதுர்த்தி, தமிழகத்தைப்பொறுத்தவரை இந்த விழா மிகச்சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஒரு சில வட இந்தியர்கள் வாழும் பகுதிகளில் அவரவர்களின் வீடுகளில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது தமிழகமும் அமைதியாக இருந்தது.

இந்த அமைதியை தமிழகத்தில் விரும்பாத ஒருசில ராம கோபாலன் வகையறாக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மதங்களுக்குள் மோதலை உருவாக்கி ஓட்டுக்கள் பொறுக்க ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதை புகுத்தி மத கலவரம் ஏற்பட்டதையும் அதனால்  ஒரு சில இடங்களில் பலஉயிர்கள் கொல்லப்பட்டதையும் நாடே அறியும்.

அதில் ஒரு பகுதியாக இந்த வருடம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திரா மாநில குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் ஏற்பட்டு இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றிருக்கின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும்  காவலர்களும் இதில் அடக்கம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் சென்றுள்ளனர். பொதுவாகவே வழிபாட்டு தளங்கள் முன்பாக மேள தாளம் அடித்துச்செல்ல தடை உள்ளது. அதையும் மீறி லுஹர் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அதிக சப்தத்துடன் மேள தாளம் அடித்துச்சென்றுள்ளனர். முஸ்லிம்கள் மேளதாள சத்தத்தை சிறிது தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஊர்வலம் சென்றவர்களோ மஸ்ஜிதின் மீது கல் எரிந்ததுடன் கலவரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

கலவரகாரர்கள் மஸ்ஜிதில் நுழைந்து தீ வைக்கவும் முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளியின் மினாராக்களை சேதப்படுத்தியும் உள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்துள்ளனர்.

முஸ்லிம்களின் வீட்டினுள் புகுந்து சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செய்ததுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 10  லாரிகளையும் தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.

சியாசாத் இணையதள நிருபர் சிராஜுதீன் சம்பவ இடத்திற்கு சென்று செய்தி சேகரித்து கொண்டிருந்தார் அவருடைய இருசக்கர வாகனமும் கேமராவும் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான அலி ஹஸ்மி இது ஒரு திட்டமிட்ட கலவரம் எனக்கூறியுள்ளார்.

இவர் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது, ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்று அவர்கள் உண்மையிலேயே நினைப்பவர்களாக இருந்திருப்பார்களேயானால், அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டதும் அமைதியாக ஊர்வலத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் வேண்டுகோளை புறந்தள்ளி கலவரத்தில் ஈடுபட்டதை வைத்து பார்க்கும்போது கலவரம் ஏற்படவேண்டும் என்று திட்டமிட்டே வந்ததுபோல் தெரிவது உண்மை.

கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலவரத்தை நிறுத்த இயலவில்லை எனவே  போலீசார் வானத்தை நோக்கி சுட்டு கலவரத்தை நிறுத்தியுள்ளனர். அங்கு மூன்று நாட்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கும் இந்து மக்களுக்குமிடையே கலவரத்தை ஏற்படுத்தி உயிரை பலி வாங்கிய இந்த பிள்ளையார் ஊர்வலம் இந்த வருடம் தமிழகத்தில் இந்து மதமக்கள் மத்தியிலேயே ஜாதிக்கலவரமாக மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வருடம் தோறும் அந்த ஊர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஒரு இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்படும். அந்த பிள்ளையாரை அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பார்கள்.

இந்த வருடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாகவும், இதர மக்கள் தனியாகவும் பிள்ளையார் சிலைகளை வைத்துள்ளனர். இறுதியாக ஊர்வலம் இதர மக்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், தங்கள் பக்கம் ஊர்வலம் வரும்போது, மேளம் தாளம் இல்லாமல், எந்தவித சத்தமும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை உதவியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளையார் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துள்ளனர்.

போலீஸ் உதவியுடன் பிள்ளையாரை கரைத்தவர்கள், சத்தம் போடாமல் போகச் சொன்னவர்களை, சம்மந்தப்பட்ட தெருவிலேயே ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.

தாங்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான், இதர மக்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், அவர்களை இந்த வழியாக வரக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த வழியாகச் சென்ற சுப்பிரமணியன் என்பவரை தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் தாக்கியுள்ளனர்.

இந்த செய்தி இருதரப்புக்கும் பரவியதையடுத்து, இருதரப்புக்கும் மோதல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் இருவர் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் மோதல் உருவாகாமல் தடுப்பதற்காக கடலூர் மாவட்ட எஸ்பி பகலவன் தலைமையில், பண்ருட்டி டிஎஸ்பி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரஜேந்திரன், விருத்தாசலம் டிஎஸ்பி அறிவழகன், திட்டக்குடி டிஎஸ்பி வனிதா உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும்,காஞ்சிபுரம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் இடையே இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் பெண் ஒருவரும் பலியாகியுள்ளார்.காஞ்சிபுரம் பாரதி நகர் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இந்த மோதலில் வையாவூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மனைவி பவானி என்பவர், கலவரக்காரர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்து மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் பிள்ளையாரை வழிபாடு நடத்தி கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பது வழக்கம் என்று கூறிதான் இந்த விழா தமிழகத்தில் உட்புகுத்தப்பட்டது. ஆனால் இந்த பிள்ளையார் வழிபாட்டால் சாதி மோதல் உருவாகி ஒருவர் இறந்தும் 3 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளது நமக்கு கவலையாக உள்ளது.

எனவே மக்களே சிந்தித்து பாருங்கள் இந்தபிள்ளயார் ஊர்வலத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுடன் பல உயிர்கள் பலியாவதற்கும் காரணமாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர்கள் கடவுளாக மதிக்கக்கூடிய ஒரு சிலையை வழிபட்டு சிறப்பு செய்து பிறகு அந்த சிலையை கொண்டு சென்று கழிவு நீர் செல்லக்கூடிய வாய்க்காலிலும்,அசுத்த நீர் நிலைகளிலும், சாக்கடைகளிலும்,கடல் உள்ள ஊர்களில் கடல்களிலும் சிலைகளை குப்புறத்தள்ளி உடத்து கால்களால் மிதித்து கரைத்து வருகின்றனர். இது அவர்கள் கடவுளை அவர்களே அவமதிப்பது போல் உள்ளது.

இது போன்ற விழாக்களில் இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை பேணுகிறோம் என்ற பெயரில் ஈமானை இழக்கும் வேதனையான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 78 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலூர் கடலில் கரைக்க, மார்க்கெட் கமிட்டி முன் ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் முன் விநாயகர் சிலைகளுக்கு, இஸ்லாமியர்கள்(?) சார்பில், அவுலியா தர்கா டிரஸ்டி யாசீன், பாபு, தே.மு.தி.க., நகர செயலர் அக்பர் அலி உள்ளிட்டோர், இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர். என்ற செய்தியையும் நாழிதழ்கள் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு அம்சமாக இடம்பெற்ற பிள்ளையார் சிலை கரைப்பில், நண்பர்களுடன் சென்று உதவிய முஸ்லிம் பெயர் தாங்கி இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

ஆட்டம் பாட்டம், கொண்டாட்டங்களுடன் நடைபெறும் இந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவில் பிற மதத்தின் பெயர் தாங்கிகளும் கூட கலந்துகொள்வதுண்டு.

மும்பையில் கடந்த வியாழன்று(01-09-2011) தொடங்கிய பிள்ளயார் சதுர்த்தி விழா, 10 நாட்கள் நடைபெறும்.நகர் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிலைகள் அமைக்கப்பட்டு கணபதி மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிள்ளையார் சிலை 3,5,7 மற்றும் 10 ஆவது நாட்களில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

அதன் ஒரு அம்சமாகவே மும்பை அந்தேரி பகுதியில் உள்ள "சாத் பங்களா" (ஏழு பங்களா) என்ற இடத்தில் பிள்ளையார் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழாவில் தமது இந்து நண்பர்களுடன் சேர்ந்து விழா ஏற்பாடுகளை கவனிப்பது முதல் அனைத்து நடவடிக்கைகளிலும் லச்சாயா என்ற 20 வயது இஸ்லாமிய பெயர் தாங்கிய இளைஞர் ஒருவரும் கலந்துகொண்டிருக்கிறார்.

பிள்ளையார் சிலை கரைப்பு ஊர்வலம் தொடங்கியவுடன், நண்பர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி, அருகிலுள்ள கடற்கரைக்கு சென்ற லச்சாயா, சிலையை கரைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கினார்.

அப்போது கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட வேகமான நீரோட்டம் லச்சாயா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நீருக்குள் இழுத்து சென்றது. அதில் லச்சாயா, கடலுக்குள் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த லச்சாயா,கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.உடல் ஊனமுற்ற தமது பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மும்பை வந்து, தமது மாமா வீட்டில் தங்கியிருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டக்கூடிய நபரான லச்சாயாவை இழந்தது அவரது பெற்றோர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

ஒரு மனிதனின் இறுதி நிலை எவ்வாறு அமைகிறதோ அதை வைத்தே மறுமையில் இறைவன் நமக்கு கூலி தருவான் இது போன்ற சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மரணித்தவரின் நிலை?. எனவே இஸ்லாமிய பெயர் தாங்கிகளே சிந்திப்பீர்!!

இதில் ஏதோ விஷேஷம் இருப்பதாக நினைத்துக்கொண்டு தினமும் கூலி வேளைக்கு செல்லும் மக்கள் கூட தங்கள் கூலிப்பணத்தை கொண்டு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கி பூஜை செய்து அதை சாக்கடையில் தள்ளும் அவலமும் நடக்கிறது. இதனால் இந்தியா முழுக்க பல கோடி ரூபாய்கள் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் வீனடிக்கப்படும் வேதனையையும் நாம் காண்கிறோம்.

மேலும் இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழலுக்கு கேடுகளும், இதனால் மிகப்பெரிய பாதிப்பும் மக்களுக்கு ஏற்படும்,என்பதையும் கவனத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் மக்களுக்கும்,மக்களின் உயிர்களுக்கும், கேடு விளைவிக்கக்கூடிய,மதக்கலவரங்களையும், ஜாதிக்கலவரங்களையும் ஏற்படுத்தி வரும் இந்த கலவர ஊர்வலத்தை தடை செய்தால் மட்டுமே நமது நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனே தடை செய்ய முன் வர வேண்டும்.

மதக்கலவரத்தை ஏற்படுத்தப்பட்ட ஊர்வலம் அவர்களுக்குள்ளேயே ஜாதிக்கலவரமோதல் ஊர்வலமாக மாறியதில் பிள்ளையாரின் நிம்மதி பறி போயிருக்கும் என்பது மட்டும் உண்மை.

a.abdul wahab,salem,  9942349566

No comments:

Post a Comment