islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒசாமா கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார் - பின்லேடன் மகள் பேட்டி


ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த புதிய செய்திகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதால் சர்வதேச ஊடகங்கள் தினமொரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு வருகின்றன.இந்த வரிசையில் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் அரபி தொலைக்காட்சி ஒன்று, பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாகத் தெரிவித்ததாக பரபரப்பு செய்தியைக் கொளுத்திப் போட்டுள்ளது.



பாகிஸ்தானின் உளவு அமைப்பானை ISI யின் கண்காணிப்பிலுள்ள பின்லேடனின் ஏமன் நாட்டைச்சார்ந்த இளம் மனைவி மற்றும் பின்லேடன் தாக்குதல் நடவடிக்கையின்போது அங்கிருந்ததாகச் சொல்லப்படும் மேலும் 12 பெண்களோடு பின்லேடனின் மகளும் உள்ளதாகச் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தெரிவித்த பின்லேடனின் மகளுக்கு 12 வயது என்றும்,ஒசாமா தங்கியிருந்த வீட்டிலிருந்து உயிருடன் அழைத்துச் செல்லப்பட்டு பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் பாதுகாப்பு வீரரும், ஒசாமா காம்பவுண்ட்டுக்குள் கொல்லப்படவில்லை. கைது செய்யப்பட்டு பிறகு வேறொரு இடத்தில் வைத்தே கொல்லப்பட்டதாகத் தெரிவித்தாகவும் தொலைக்காட்சி நிறுவனம் உறுதியாகச் சொல்கிறது.

ஒசாமா பின்லேடனை பிடிக்கும் நடவடிக்கையின்போது,அவர் பதுங்கியிருந்த வீட்டருகே நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அதில அவருடைய மகன் ஒருவரும் இருந்தாரெனவும் பெயர்சொல்ல விரும்பாத பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தாரென்றும் கூறியுள்ளது.

பின்லேடன் மீதான தாக்குதலின்போது மூன்று பெண்கள் உட்பட ஒன்பது குழந்தைகளில் ஏமன் மனைவிக்குப் பிறந்த மகளும் இருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். தங்கள் பாதுகாப்பிலுள்ள பின்லேடன் குடும்ப உறுப்பினர்களிடம் பல கேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது என்று இன்னொரு அதிகாரி தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்பதுபோல் ஒசாமா இருந்தாலும் இறந்தாலும் ஊடகங்களுக்குக் கொண்டாட்டம்தான் போல!
inneram

No comments:

Post a Comment