விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் முதல் 3 இடங்களை ஆந்திர மாநில மாணவர்கள் பிடித்தனர்.
நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியது:
நுழைவுத் தேர்வு எழுத ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 493 மாணவ, மாணவியர் விண்ணப்பம் அளித்திருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 668 மாணவர்கள், 31 ஆயிரத்து 656 மாணவியர் தேர்வு எழுதினர்.
முதல் 3 இடங்களை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் முறையே கே.ஹர்ஷவர்த்தன் (விஜயவாடா), பி.சாய்கிரண் (ஹைதராபாத்), எம். அசோக் வரதன் (குண்டூர்) பிடித்துள்ளனர்.
முதல் 10 இடங்களில் 6 ஆந்திர மாணவர்களும், புது தில்லி, மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம், மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு மாணவரும் இடம்பெற்றுள்ளனர்.
தரவரிசையில் முதல் 300 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ரோஷன் ஜெய்சங்கர், எஸ். அரவிந்த், ரஞ்சனி சீனிவாசன், வி. ஹரிகிருஷ்ணா, எச். சூரஜ்குமார், எம். கார்த்திக், ஆர். ஆதித்யா, ஏ. மீனாட்சி ஆகிய 7 மாணவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தரவரிசையில் 15 ஆயிரம் இடங்களுக்குள் வேலூரை சேர்ந்த 12 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6 மாணவ, மாணவியர் ஐடாஸ்கடர் பள்ளியையும், 5 பேர் சிருஷ்டி மெட்ரிகுலேஷன் பள்ளியையும், ஒரு மாணவர் சன்பீம் பள்ளியையும் சேர்ந்தவர்கள்.
ரியாத், சிங்கப்பூர், துபாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 26 பேர் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனர்.
நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்9.ஸ்ரீர்ம், ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹழ்ங்ள்ன்ப்ற்ள்.ஸ்ரீர்ம், ஜ்ஜ்ஜ்.ம்ண்ய்ஞ்ப்ங்க்ஷர்ஷ்.ஸ்ரீர்ம், ஜ்ஜ்ஜ்.ஞ்ப்ர்க்ஷஹப்ண்ய்ச்ர்ஜ்ண்ய்ஞ்ள்.ஸ்ரீர்ம், ஜ்ஜ்ஜ்.க்ஷட்ஹழ்ஹற்ட்ங்க்ன்.ஸ்ரீர்ம், ஜ்ஜ்ஜ்.ங்ஷ்ஹம்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ங்ற், ஜ்ஜ்ஜ்.ண்ய்ள்ற்ஹய்ற்ங்ஷ்ஹம்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ஸ்ரீர்ம் ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூன் 1-ல் கவுன்சலிங்: 1 முதல் 4 ஆயிரம் வரையிலான தரவரிசையில் இடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜூன் 1-ம் தேதி கவுன்சலிங் நடைபெறுகிறது. 4001 முதல் 7 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 2-ம் தேதியும், 7001 முதல் 10 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 3-ம் தேதியும், 10001 முதல் 13 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 4-ம் தேதியும், 13001 முதல் 16 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 6-ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறும்.
வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் கவுன்சலிங் நடைபெறுகிறது. மாணவர்கள் இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்கலாம் என்றார் வேந்தர் விஸ்வநாதன்.
dinamani
No comments:
Post a Comment