முஸ்லிம்களின் புனித நூலான குரானின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்குள்ள அமெரிக்க கமாண்டர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இஸ்லாமிய மதப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு முறையற்ற வழி கடைபிடிக்கப்பட்டது என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதாக ஜெனரல் ஜோன் அல்லென் கூறினார்.இந்தப் பொருட்களை தாலிபன் கைதிகள் தமக்கிடையே தகவல்களை கைமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தியதால் அவர்களிடமிருந்து அமெரிக்கப் படையினர் அவற்றைப் பறிமுதல் செய்ததாக மூத்த ஆப்கன் அதிகாரிகள் இருவர் பிபிசியிடம் கூறினர்.
இந்த விடயம் காரணமாக காபூலின் வடக்கேயுள்ள பாக்ராம் விமானப்படைத் தளத்துக்கு வெளியே பெரும் போராட்டமொன்று நடந்தது.
இந்தப் போராட்டத்தில் கூடியிருந்தவர்களைக் கலைக்கும் நோக்கில் சர்வதேசப் படையினர் ரப்பர் குண்டுகளை சுட்டதில் ஒருவர் காயமடைந்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஐந்துபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment