islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நோன்பு--''இஃதிகாப்''

                                                      இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல் என்ற பொருளாகும் இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்து தங்குவதற்கு சொல்லப்படும்.

இஃதிகாபும் அதன் வகைகளும்.

1.நன்மையை நாடி சிறிது நாட்கள் அல்லது சிறது நேரம் அல்லது ரமலானில் கடைசி பத்தில் தங்குதல் போன்றைவைகள் சுன்னத்தாக இருக்கிறது.

2. எனது இந்த தேவை நிறைவேறினால் நான் பள்ளியில் குறிப்பிட்ட நாள் தங்குவேன் என்று என்னி நேர்ச்சை செய்வது இது கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழவதை விடவும் ஜமாத்துடன் தொழுவது இருபத்தி ஏழு ஐந்து மடங்கு மதிப்பில் சிறந்ததாகும் உங்களில் ஒருவர் உலூ செய்து அதை அழகுறச்செய்து தொழுகின்ற நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான் ஒரு பாவத்தை விட்டும் நீக்குகிறான் தொழுகையை எதிர்பார்த்து பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராக கருதப்படுகிறார் தொழுத இடத்திலே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கு தொல்லை அளிக்காத வரையில் இறைவா இவரை மன்னித்து விடு இவருக்கு அருள் புரி என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அறிவிப்பவர் அபூஹஹுரைரா (ரலி)
(நூல் புகாரி 477)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதரே மஸ்ஜிதுல் ஹரமில் ஒரு இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்சை செய்திருந்தேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உம் நேர்ச்சையை நிறைவேற்றும் என்றார்கள் உமர் (ரலி) ஒரு இரவு இஃதிகாப் இருந்தார்கள்.
(நூல் புகாரி 2042)

இஃதிகாப் காலத்தின் ஆரம்பமும் முடிவும்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.

(நூல் முஸ்லிம் 2007)

அபூஸயீத் (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள் இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்.(சுருக்கம்)

(நூல் புகாரி 2018)

இஃதிகாப் இருப்பவருக்கு ஆகுமானவை.

அவசிய தேவைக்காக வெளியே செல்லுதல்.
ஆயிஷா (ரலி) கூறியதாவது நபி ஸல் அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன் இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வரமாட்டார்கள்.

(நூல் புகாரி 2029)

இதிலிருந்து அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்றும் பள்ளியில் தங்கும் போது தலைவாரலாம் என்றும் அறிய முடிகிறது.
தேவை ஏற்படும் போது பள்ளிவாசவில் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஸபிய்யா (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும் போது அவர்களிடம் நான் செல்வேன் சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன் (ஹதிஸின் சுருக்கம்)

(நூல் புகாரி 2035)

இதிலிருந்து அவசிய தேவை ஏற்பட்டால் மனைவிமார்களுடனும் பேசலாம் என்பதும் இஃதிகாப் உள்ளவர்களை சந்திக்க செல்லலாம் என்றும் வந்தவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பலாம் என்றும்  விளங்க முடிகிறது.

பள்ளியில் கூடாரத்தை அமைத்துக்கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன்.(சுருக்கம்)

(நூல் புகாரி 2033)

இஃதிகாப் இருப்பவருக்கு தடுக்கப்பட்டவைகள்.

பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப் படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன் அத் 2 வச 187)

அதுமட்டுமில்லாமல் இச்சைக்கு தூண்டக்கூடிய எந்தக்காரியத்தையும் செய்யக்கூடாது ஏனென்றால் இஃதிகாபின் நோக்கத்திற்கு விரோதமானதாகும்.

தேவையில்லாமல் பள்ளியைவிட்டும் வெளியே செல்லக்கூடாது.

ஆயிஷா (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிபாக் இருக்கும் போது தமது தலையை வீட்டி­ருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன் இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வரமாட்டார்கள்.

(நூல் புகாரி 2029)

நோயாளியை சந்திக்கவோ ஜனாஸாவை பின்தொடரவோ கூடாது.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது நோயாளியின் அருகே நிற்காமல் நடந்தவர்களாக நலம் விசாரிப்பார்கள்

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
(நூல் அபூதாவூத் 2114 மாலிக் 606)

இந்த ஹதிஸ் நோயாளியை விசாரிக்கச்செல்லாம் என்று அறிவித்தாலும் நிற்காமல் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறது என்றாலும்  இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் லைஸ் பின் அபீசுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரைப்பற்றி அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

(மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 509)

மாலிகில் இடம் பெரும் செய்தி மவ்கூப் ஆகும்.
(மவ்கூப் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) சம்மந்தப்படாத செய்திகளுக்கு மவ்கூப் என்று சொல்லப்படும் இது பற்றி கூடுதல் விபரங்களுக்கு அறிய சகோதரர் பி. ஜைனுல் ஆபீதீன் மொழிபெயர்த்த திர்மிதி நூலை பார்வையிடுக.)

இஃதிகாப் இருப்பவர் ஜனாஸாவை பின் தொடருவார் இன்னும் நோயாளியையும் சந்திப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி)
(நூல் இப்னு மாஜா 1767)

ஆனாலும் இந்த செய்தியில் நிறைய குறைபாடுகள் இருக்கிறது இதில் இடம் பெறும் அல்ஹய்யாஜ் குராஸானி மேலும் அன்பஸா பின் அப்திர்ரஹ்மான் அப்துல் காலிக் போன்றோர் குறை கூறப்பட்டவர்கள்.

நோயாளியை விசாரிக்கச் செல்லாமலும் ஜனாஸாவில் கலந்து கொள்ளாமலும் மனைவியை தொடாமலும் அவளிடத்தில் இல்லறத்தில் ஈடுபடாமலும் அவசிய தேவைக்காக தவிர மற்றவைகளுக்கு வெளியே வராமல் இருப்பது இஃதிகாப் இருப்பவர் மீது  சுன்னத்தாகும் இன்னும் நோன்பு இல்லாமல் இஃதிகாப் இல்லை தொழுகைக்காக மக்கள் கூடுகின்ற (பெரிய) பள்ளியைத் தவிர மற்ற பள்ளியில் இஃதிகாப் இல்லை என்று
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

(நூல் அபூதாவூத் 2115)

இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும் ஆயிஷா (ரலி) கூற்றாக இது அறிவிப்படுகிறது. என்றாலும் புகாரியில் ஆதாரப்பூர்வமான செய்தி ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.

(நூல் புகாரி 2029)

இந்த ஹதிஸில் கூறப்பட்டதைதவிர மற்றவைகளுக்கு வெளியே வரமாட்டார்கள் என்று அறுதியிட்டு கூறுவதனால் மய்யித்தை குளிப்பாட்டவோ பின்தொடரவோ கூடாது அதே நேரத்தில் ஜனாஸாத்தொழுகை பள்ளிவாசலில் வைத்து நடக்கும் தொழுகையில் கலந்து கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை.

பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

இதில் அறிஞர்களுக்கிடையே நான்கு விதமான கருத்துகள் நிலவுகிறது.

1.பள்ளிவாசலில் இருக்கலாம் இவர்கள் கூறக்கூடிய ஆதாரம் புகாரியில் வருகின்ற ஆதாரங்களை முன் வைத்து கூறுகின்றனர்.

2.(மஹ்ரமான) ஆண் துனைவுடன் இருக்கலாம் இவர்களும் அதே ஸபிய்யா (ரலி) அவர்களின் ஹதிஸை ஆதாரமாக காட்டி கூறுகின்றனர்.

3.பெண்களுக்கு இஃதிகாப் என்பது இல்லை என்று சிலர் கூறுகின்றனர் இவர்கள் கூறுகின்ற ஆதாரங்கள் என்வென்றால் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களைத்தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாப் இருந்ததில்லை எனவே அது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் குறிப்பானது என்று வாதிடுகின்றனர்.

4.பள்ளிவாசலில் இருக்கக்கூடாது வீட்டில் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட (பள்ளியில்) இடத்தில் இருக்க வேண்டும் இவர்கள் பெண்கள் வீட்டில் தொழலாம் என்று வந்திருக்கின்றது அதை வைத்து பெண்கள் வீட்டில் இஃதிகாப் இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

மூன்றாவது கருத்துடையோர் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு குறிப்பானது என்று சொல்வதற்கு எந்த ஆதாரத்தை காட்டவில்லை ஒன்றை குறிப்பாக்க வேண்டும் என்றால் சரியான ஆதாரம் தேவையாகும் எனவே இந்தக்கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான்காவது கருத்துடையவர்களுக்கு வெறும் யூகத்தை தவிர வேறு இல்லை.

அல்லாஹ் கூறுகிறான்  ولا تباشرواهن وانتم عاكفون في  المساجدஎன்று தெளிவாக அறிவிக்கிறான் பள்ளிவாசல் அல்லாத மற்ற இடங்களில் (வீடுகளில்) இஃதிகாப் இருப்பது கூடும் என்றால் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது  என்று வந்திருக்காது ஏனென்று சொன்னால் பள்ளிவாசல் அல்லாத மற்ற இடங்களில் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது  என்று எந்த தடையும் வரவில்லை.

அது மடடுமில்லாமல் இப்னு அப்பாஸ் (ரலி­) அவர்கள் பள்ளிவாச­லில் இஃதிகாப் இருப்பது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய நடைமுறை பித்அத் என்று கூறுகிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி­) கூறுகிறார்கள் அல்லாஹ்விடத்தில் காரியங்களில் மிகவும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது பித்அத்துதான் வீடுகளில் இருக்கின்ற பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதும் பித்அத்துதான்.

(நூல் சுனன் பைஹகி அல் குப்ரா பாகம் 4 பக் 316)

முதலாவது கருத்துவுடையவர்கள் இரண்டாவது கருத்தை ஆதாரிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை முதல் இரண்டுக்கு மட்டும்தான் சரியான வலுவான ஆதாரம் உள்ளதால் இதுதான் நமக்கு சரியான கருத்தாக தெரிகின்றது.

ஆட்சேபனைகளும் பதில்களும்.

பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதாக கூறுகிறீர்கள் வேறு ஏன் நபி (ஸல்) அவர்கள் அந்தக்கூடாரத்தை அகற்றச்சொன்னார்கள்.

(புகாரி 2041)

பதில். இது பெண்கள் இஃதிகாப் இருக்ககூடாதுதான் காரணம் என்றால் ஹப்ஸா (ரலி­) ஆயிஷா (ரலி­) போன்றோர் அனுமதி கேட்டுகும்போதே அனுமதி மறுத்திருப்பார்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய  அனுமதியில்லாமல் கூடாரத்தை நட்டியதால்தான் நபி (ஸல்) அவர்கள் அகற்றச்சொன்னார்கள்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பதஹுல் பாரியில் விளக்கம் எழுதும் போது கூறுகிறார்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஸ் அனுமதி கேட்டார்கள் என்று எந்த அறிவிப்பிலும் நான் பார்க்கவில்லை என்று கூறுகிறார்.
அதுமட்டும்மில்லாமல் ஸைனப் பின்த் ஜஹ்ஸ் அவர்கள் அதிக ரோஷமுள்ளவர்களாக இருந்தார்கள் அதனால்     ஏதும் பிரச்சனை ஏற்படும் என்று என்னிதான் அகற்றச்சொன்னார்கள்.
அதுமட்டுமில்லாமல் இன்னும் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள்.

1.நிறைய கூடாரங்கள் இருந்தால் அதனால் தொழகையாளிகளுக்கு சிரமம் ஏற்படும்.

2.அவர்களோடு நிறைய மனைவிமார்கள் இருந்தால் வீட்டில் இருந்ததைப்போன்று ஆகிவிடும்.

3.எந்த நோக்கத்திறகாக இருந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடும்.

(பத்ஹுல் பாரி பாகம் 3 பக் 338)

இன்னும் சொல்லப்போனால் பெண்களைத் நபி ஸல் அவர்கள் தடுத்திருந்தார்கள் என்று இருந்தால் நபி ஸல் அவர்களின் மரணத்திடிற்கு பின்பு அவர்களுடைய மனைவிமார்கள் இஃதிகாப் இருந்திருக்கமாட்டார்கள்.
இன்னும் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாப் இருந்தார்கள் என்று புகாரி ஹதிஸ் நமக்கு அறிவிக்கிறது.

நபி (ஸல்) அவர்களுடைய மனையரில் ஒருவர் உதிரப்போக்கினால் இரத்தத்தை காண்பவராக இருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள் சில வேளை இரத்தத்தின் காரனமாக தமக்கு கீழே ஒரு தட்டை வைத்து கொள்வார்கள் மஞ்சள் நிற நீரை ஆயிஷா (ர­) பார்த்ததாகவும் இது இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்னை போன்றுதான் என்று சொன்னதாகவும் இக்ரிமா (ரலி) கூறுகிறார்கள்.

(நூல் புகாரி 309)

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி தந்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப்(ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபொழுது நான்கு கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாப் இருந்தார்கள்.




அறிவிப்பாளர்:ஆயிஷா(ரலி)
புஹாரி 2041

இந்த ஹதிஸில் ஸைனப் (ர­) அவர்கள் அதிக ரோஷமுள்ளவர்களாக இருந்த காரனத்தினால்தான் அகற்றச்சொன்னார்கள் என்பது தெளிவாகின்றது எனவே பெண்கள் கணவர் துனைவுடன் இஃதிகாப் இருக்கலாம் மார்க்கத்தில் இதற்கு எந்த தடையும் இல்லை.

கடையநல்லூர் அக்ஸா.காம்--லிருந்து அ.அப்துல் வஹாப், சேலம்.

No comments:

Post a Comment