islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பயர் இன்ஜி. படித்தால் வெளிநாடுகளில் வேலை!

                                 


தொழில்துறையின் வளர்ச்சிக்கேற்ப ஆபத்துக்களும் பெருகி வருகின்றன. குறிப்பாக அனைத்து தொழிற்சாலைகளும் மின்மயம், கணினிமயம் என ஆகிவிட்ட பிறகு பாதுகாப்பு நடைமுறை என்பது தேவையான ஒன்றாகி விடுகிறது. தீவிபத்து ஏற்பட்டால் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பது, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப் பது ஆகியவற்றை கல்வி ரீதியாக அறிந்தவர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சமீப ஆண்டுகளாக பயர் அண்ட் சேப்டி கல்லூரிகள் எண்ணிக்கையில் அதிகமாகி உள்ளன.

இங்கு பயர் சேப்டி தொடர்பான டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங் கலை, முதுகலை மற்றும் இத்துறை சார்ந்த இன்ஜினியரிங் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இன்ஜினியரிங் படிப்பை பொறுத்தவரை தீ விபத்துக்களிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் பொறியியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள்  பயன்படுத்தப்படுகின்றன. தீ விபத்துக்கான காரணம், விபத்து நேரிட்டால் மக்களின் செயல் பாடு எப்படியிருக்கும், சொத்துக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற் படும் விளைவுகள் பற்றியும், தீ விபத்தை உணர்த்தும் அபாய அலாரம், தீ விபத் தின் சேதத்தைக் குறைக்கும் ஸ்பிரிங்க்ளர் போன்ற சாதனங்களைப் பொருத்துவது பற்றியும் படிக்கலாம்.

இந்தியாவில் நாக்பூரில் உள்ள நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி  மூன்றரை ஆண்டுகளில் முடிக்கக் கூடிய பயர் இன்ஜினியரிங் படிப்பை வழங்கி வருகிறது. தீ விபத்துக்களின் போது பயன்படுத்தப்படும் சாதனங் களை மறுவடி வமைப்பது, புதிய சாதனங்களை உருவாக்குவது போன்ற பணிகள் குறித்து இப்படிப் பில் கற்றுத்தரப்படுகிறது. நல்ல தகவல் தொடர்புத்திறன், நிர்வகிக்கும் திறன், பிரச்னைகளின் மையத்தில் முடிவெடுக்கும் திறன், விரைந்து முடிவெடுத்தல் மற்றும் பிரச்னை களை திறமையாக கையாளுதல் போன்றவையே இப்படிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு அடிப்படைத் தகுதிகள்.

மூன்றரை ஆண்டு கால பி.இ. பயர் இன்ஜினியரிங், சப் ஆபீசர் பிரிவு படிப்புகள், சேப்டி அண்ட் பயர் இன்ஜினியரிங் பி.டெக். படிப்புகள், 3 ஆண்டு பி.எஸ்சி. பயர் இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் பயர்மேன் பயிற்சி உள் ளிட்ட பல்வேறு படிப்புகள் இத்துறை யில் உள்ளன. இது தவிர மாநில தீயணைக்கும் பயிற்சிப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிகளைத் தருகின்றன. இவை தவிர சில தனியார் கல்வி நிறுவனங்களும் பயர் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகளைத் தருகின்றன.
பி.இ. பயர் இன்ஜினியரிங் படிப் பில் சேர பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

19 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண் டும். கல்வித் தகுதியைத் தவிர, சிறப் பான உடற்தகுதியைப் பெற்றிருப்பது மிக முக்கியம். உயரம் குறைந்தது 165 செ.மீ. இருக்க வேண்டும்.   எடை 50 கிலோவுக்குக் குறையாமலும், மார்பளவு குறைந்தது 81 செ.மீட்டரும் குறைந்தது 5 செ.மீ. விரிவாக்கமும் இருக்க வேண்டும். இப்படிப்பை முடிப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நிர்வாக மட்டத்தில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தீ தடுக்கும் நிறுவனங்களில்   பல்வேறு பிரிவுகளில் பணிபுரியலாம்.

பெட்ரோலிய கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், வேதிப் பொருட்களை தயாரிக்கும் ரசாயன கூடங்கள் போன்றவற்றில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. மேலும், விமான நிலையங் கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றி லும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. நிறுவனத்திற்கேற்ப நல்ல ஊதியமும் கிடைக்கிறது.
 

No comments:

Post a Comment