அரசு அலுவலகங்களிலும், அரசு அலுவலக வளாகத்திலும் கடவுள் படங்கள் மற்றும் கோவில்கள், சாமி சிலைகள் வைக்க கூடாது என்றும், அப்படி முன்னரே வைக்கப்பட்டிருந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் படி 1968-ம் ஆண்டிலேயே (நினைவு குறிப்பு என்-7553/66-2) தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும், நம் ஊர் அதிகாரிகள் அரசு உத்தரவை மதிக்காமல் நடப்பபதில் முதலிடம் வகிப்பவர்கள். அதனால், எந்த அலுவலகத்திலும் இருக்கும் சாமி படங்களை எடுப்பதுமில்லை.
உயர் அதிகாரிகள் கூட சாமி படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க கூடாது என்று சொல்லுவதுமில்லை.
காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் காவல் நிலைய வளாகத்திலும், காவல் நிலையங்களுக்கு உள்ளும் கோவிலே கட்டியுள்ளார்கள்.
ஆனால், கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனரான உமாசங்கர் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் சேலம் கோ-ஆப் டெக்ஸ் அலுவலகத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது, கடைவீதியில் உள்ள பட்டு விற்பனை நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரமுள்ள பிளையார் சிலையையும், காசாளர் அமரும் நாற்காலிக்கு மேலே இருந்த லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாசலபதி, பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சாமி படங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
ஐயா, இது திருமண பட்டுசேலை வாங்க வரும் போது பொதுமக்கள் பிள்ளையாரை பார்த்துட்டு வாங்குவது “செண்டிமெண்ட்” என்று சொல்லியுள்ளார்கள் அதிகாரிகள்.
“அரசு” உத்தரவை மட்டும் கடைபிடியுங்கள் எந்த செண்டிமேடுக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டார் உமாசங்கர்.
கோ-ஆப் டெக்ஸ்சின் வரவேற்ப்பு வாயிலில் இருந்த பிள்ளையார், இப்போது சரக்கு இருப்பு “கிடங்கிற்கு” போய்விட்டார்.
No comments:
Post a Comment