islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குஜராத்தில் உண்மை வாக்குமூலம் அளித்த காவல் துறை உயர் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..!!!


                                       
                                        
  

''குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களும் என்னை கடும் மனவேதனைக்குள்ளாக்கி உள்ளது. குஜராத்தில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. அங்கு சிறுபான்மை மக்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகி விட்டது, கலவரத்தை நீங்களே (மோடி) முன்னின்று நடத்துவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, அங்கு என்ன நடக்கிறது, உங்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவை என்னிடம் கேளுங்கள், உடனே அதை மத்திய அரசு செய்யும், சிறுபான்மையினரின் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட கூடாது''.

2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக நர(ந்தர)மோடி இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் இந்தியப்பிரதமராக இருந்தார். குஜராத்தில் பயங்கரவாதி நர(ந்தர)மோடி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மதகலவரத்தையும் அதை தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் தான் மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது 

இப்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடிதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளிக்கொண்டுவரப் பட்டுள்ளது.

இந்தக்கடிதம் ஒன்றே போதும் குஜராத்தில் நடந்த ஈவிரக்கமற்ற படுகொலைகளை நம் மனக்கண்முன் கொண்டுவர.

உலக மக்களின் உயிருக்கு பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் உலகளாவிய பங்கரவாதி அமெரிக்காவே, தனது நாட்டிற்கு மோடி வருவதை, இவர் மனித உரிமையை மீறி விட்டார், தனது நாட்டில் சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான கேள்விக்குறியை ஏற்படுத்தி விட்டார் என காரணம் கூறி, தடை செய்து விசா வழங்க மறுத்துள்ளதே மோடி எவ்வளவு பெரிய பயங்கரவாதி என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரி இந்துத்துவக் கொடியவர்களால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா அம்மையாரின் கடும் முயற்சிக்குப்பிறகு உச்சநீதி மன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக்குழு குஜராத் முதல் அமைச்சர் நர(ந்தர)மோடியைப் பல மணி நேரம் விசாரித்தது.

இந்த வழக்கில் குஜராத் மாநில உளவுத்துறை முன்னாள் தலைவர் சஞ்சீவ்பட்டின் பிரமாண வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

காவல்துறை அதிகாரிகள் மத்தியில் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரமோடி எத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை எல்லாம் அவர் தெளிவாக வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம், முஸ்லீம்களைத் தண்டிக்க வேண்டும்? கலவரங்களைக் காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்தார் முதல் அமைச்சர் என்கிற தகவல்களை எல்லாம் இந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், குஜராத் முதல்வர் நர(ந்தர)மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் குஜராத் மாநில காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

2002, பிப்ரவரி 27-ல் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர் நிலைக் கூட்டம் குறித்து தன்னை மிரட்டி தவறாக வாக்குமூலம் பெற்றதாக சஞ்சீவ் பட் மீது காவலர் பான்ட் புகார் தெரிவித்திருந்தார்.

2002-ல் சஞ்சீவ் பட்டின் கீழ் காவலர் கே.டி. பான்ட் பணிபுரிந்தார். அவர், சஞ்சீவ் பட்டின் மீது அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நடுநிலையாளர் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அவரிடம் குஜராத் கலவரம் குறித்து விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் என்னிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெற்றதாகத் தெரிவிக்குமாறு சஞ்சீவ் பட் வற்புறுத்தினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த என்னை சஞ்சீவ் பட் மிரட்டினார்.

மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் மோத்வாடியாவிடம் என்னை அழைத்துச் சென்றார். அவரும் சஞ்சீவ் பட் கூறியதன்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன் பின், வழக்குரைஞரிடம் அழைத்துச் சென்று 2 பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றார் என பான்ட் புகார் கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருக்கும் சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இந்த வாதத்தை ஏற்கமறுக்கிறார் குஜராத் மாநிலத்தின் முன்னாள் டி ஜி பி ஸ்ரீகுமார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சியமளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

குஜராத் மதக்கலவரங்களை நர(ந்தர)மோடி தான் திட்டமிட்டு நடத்தினார் என்று முதன்முதலில் கூறிய தான் பதவி உயர்வு அளிக்கப்படாமலும், ஓய்வூதியம் வழங்கப்படாமலும் பழிவாங்கப்பட்டதாக கூறும் ஸ்ரீகுமார், அதே போல சஞ்சீவ் பட்டும் நர(ந்தர)மோடிக்கு எதிராக சாட்சியமளித்ததற்காக தற்போது பழிவாங்கப்படுவதாகக் கருதுகிறார்.

குஜராத் முதலமைச்சர் நர(ந்தர)மோடி தலைமையில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை நடத்திய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொண்டதாக தெரிவிக்கிறார் ஸ்ரீகுமார். சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பதிலடியாக, முஸ்லீம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு மூன்று நாட்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் அவர்களை காவல்துறை தடுக்கக்கூடாது என்றும் நர(ந்தர)மோடி உத்தரவிட்ட தகவலை சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார் என்பது தான் அவர் மீது நரேந்திரமோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கோபம் வரக்காரணம் என்கிறார் ஸ்ரீகுமார். ஆனால் சஞ்சீவ் பட்டின் இந்த சாட்சியத்தை நர(ந்தர)மோடி தரப்பு மறுத்துவருகிறது.

ஆனாலும், நர(ந்தர)மோடிக்கு எதிரான சஞ்சீவ் பட்டின் சாட்சியம் மிக மிக முக்கியமானது என்கிறார் ஸ்ரீகுமார். "குஜராத் கலவரங்களை வடிவமைத்து, சதித்திட்டம் தீட்டி, நடத்தி முடித்தவர் நர(ந்தர)மோடிதான் என்பதற்கான ஒரே நேரடி சாட்சியமாக சஞ்சீவ் பட் இருக்கிறார். மோடியின் ஆணையின்படியே காவல்துறை அதிகாரிகள் எல்லாம் செயற்பட்டார்கள் என்பதற்கான ஒரே நேரடி சாட்சியமாக சஞ்சீவ் பட் இருக்கிறார். அதனால் தான் அவரை குறிவைத்து பழிவாங்குகிறார்கள். இதில் மேலும் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சினைக்காக, ராகவன் தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவும் குஜராத் அரசாங்கத்தோடு ஒத்துப்போகிறதே தவிர, உண்மையை வெளிக்கொண்டுவர மறுக்கிறது. குஜராத் அரசு போட்டுக்கொடுக்கும் செயற்திட்டத்திற்கேற்ப இவர்களின் புலனாய்வு சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், நான் எப்படி தனி மனிதனாக நீதிமன்றம் போய் எனக்கான நியாயத்தை பெற்றேனோ, சஞ்சீவ் பட்டுக்கும் அது தான் ஒரே வழி. வேறு வழியில்லை," என்கிறார் குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார்.

சஞ்சீவ் பட்டை கைது செய்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சஞ்சீவ் பட்டின் வீட்டில் சோதனை நடத்திய குஜராத் போலீஸ், மீண்டும் சனிக்கிழமையன்றும் அவரது வீட்டிற்கு 30 முதல் 40 காவலர்கள் சோதனையிட சென்றுள்ளனர் அதற்கு அவரது மனைவி அவர்களை வீட்டினுள் அனுமதிக்க மறுத்துள்ளார். வீட்டை சோதனையிட வாரண்ட் எங்கே? என்று கேட்டதற்கு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டை காட்டியுள்ளனர். இந்த வாரண்ட்டிற்கு நேற்றே சோதனை போட்டாயிற்று இன்று சோதனையிடுவதற்கு வாரண்ட் எங்கே என்று? கேட்டு உள்ளே விட மறுத்துள்ளார். சிறிது நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட காவலர்கள் வீட்டை சோதனையிடாமலேயே தலைமையகம் திரும்பினர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக்காரணம் நர(ந்தர)மோடிக்கு எதிராக உண்மை வாக்குமூலம் அளித்ததுதான் என்பதை காவல்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உண்மைப்படுத்துகின்றது.இந்நிலையில் என் கணவரின் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் குஜராத் அரசின் உயர் அதிகாரிகளுக்கும் சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும்,தமது கணவரை சந்திக்க தம்மையோ தமது வழக்கறிஞரையோ குஜராத் காவல்துறை அனுமதிக்க வில்லை என்றும் ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.

குஜாரத் அரசின் முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீ குமாரும் சஞ்சீவ் பட்டைச் சந்திக்க தம்மை அனுமதிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய் அவர்களுக்கும் சஞ்சீவ் பட்டை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப் பட்டுள்ள சஞ்சீவ் பட் குஜராத் முதல்வர் நர(ந்தர)மோடியின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள மாநிலக் குற்றப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும் இப்பிரிவு அஹமதாபாத் நகரில் போலி என்கவுன்டர் என்றுகூறப்படும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் சட்டவிரோதச்செயலில் கைதேர்ந்த காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதே, ஏதோ காரணத்தைச்சொல்லி அவரைக்கொலை செய்யத்தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டதற்கு பலதரப்பினரும் கண்டணம் தெரிவித்துள்ளர்.

மனித உரிமையை மீறும் செயல்-- சமூக ஆர்வலர் தீஸ்தாசெடல்வாட்.

உண்மைகள் வெளி வருவதை மோடி விரும்பவில்லை-- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.

நேர்மையான அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையை நசுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான செயல், அவரது வீட்டில் காவல்துறையினர் அத்து மீறியது,அச்சுறுத்தியது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது--இந்திய கம்யூனிஸ்ட்.

சஞ்சீவ் பட்டை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. இதை தள்ளுபடி செய்து, அவரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதற்காண காரணம் சிறு பிள்ளத்தனமானது என்றும் கண்டணம் தெரிவித்துள்ளது நீதிமன்றம். 

ஒன்பதாண்டுகள் உருண்டோடி ஓய்ந்து விட்டன. இன்னும் இந்தப் படுகொலைபற்றி உண்மை வாக்குமூலம், விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

ஆனால், குற்றவாளியை குற்றவாளி என்று உண்மை வாக்குமூலம் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார்.

இதற்கு காரணம், உச்சநீதி மன்றம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தன்னை நிரபராதியாக மக்கள் மன்றத்தில் சித்தரிக்க 3 நாட்கள் உண்ணாவிரதம்(?) இருந்த காரணத்திணால், மக்கள் மத்தியில் தன்னுடைய கொலைகுற்றம் மறக்கப்பட்டு, வரக்கூடிய பொதுத்தேர்தலில் தன்னை இந்தியப்பிரதமராக்கி விடுவார்கள் என்ற பகல் கனவில் மிதக்கும் மோடி மஸ்தான் வேலை இது. ஆனால்,மக்கள் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக தண்டணை கொடுத்து குற்றவாளியை ஆட்சியை விட்டே மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பதை விரைவில் உலகம் கண்டு கொள்ளும். மோடியும் கண்டு கொள்வார்.     

a.abdul wahab,salem,-- 99423 49566

No comments:

Post a Comment