islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தென்மேற்கு பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி- 40,000 பேர் பாதிப்பு


 பாகிஸ்தானில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை 5. 53 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவுக்கு தென்மேற்கில் 330 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் தென்மேற்கு பாகிஸ்தானில் 7.2 அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதில் பெருமளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

8-10-2005 அன்று 7.6 அளவிற்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 3.5 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கைபர் பாக்டுங்க்வா தான் பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment