islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இயக்குனர் பாலா-வுக்கும், தமிழ் திரை உலகத்திற்கும் எச்சரிக்கை...!!!!


இன்றைக்கு உலகமக்களை கலாச்சார சீரழிவிலும்,விபச்சாரம்,ஒழுக்கக்கேடு,தகாதஉறவு, வன்முறை,மற்றும் வக்கிரம் போன்ற பல கேடுகெட்ட செயல்களிலும் தள்ளக்கூடிய காரியத்தை செய்து கொண்டிருப்பதில் முண்ணனியில் இருக்கக்கூடிய ஊடகம் ஒன்று உண்டு அது எது? என்று சிறிதளவு சிந்திக்கக்கூடிய மக்களை கேட்டாலும் ஒருமித்தக்குரலில் சொல்வார்கள் ''சினிமா'' என்று.

இத்தகைய கேடுகெட்ட பெருமைக்குரிய சினிமாவில், இந்திய சுதந்திரத்திற்காகவும்,இந்த நாட்டின் இறையான்மைக்காகவும் தங்களின் சதவீதத்தை விடவும் அதிக அளவில் தங்களின் இன்னுயிரை ஈந்தும்,கொடிய சிறைச்சாலைக்குச்சென்று பல கொடிய துன்பங்களை அனுபவித்தும்,தங்களின் ஜீவாதார உரிமையான இடஒதுக்கீடு,கல்வி,பொருளாதாரம், போன்றவற்றை இழந்து சுதந்திர இந்தியாவை உருவாக்கிய முஸ்லீம்களை,தீவிர வாதிகளாகவும்,இந்தியாவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கக்கூடிய தீயவர்களாகவும் சித்தரிக்கக்கூடிய போக்கு தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். காலத்தில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. இனறைக்குமுண்ணனியில் இருக்கக்கூடிய கதாநாயகர்கள்,மற்றும் இயக்குனர்கள் அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்கள் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களை கேவலப்படுத்திய படங்களை பட்டியலிட்டால் இந்த்ப்பக்கம் போதாது.

உண்மையிலேயே தீவிரவாதிகளாகவும்,இந்தியாவை ஒரு பாட்டில் சாராயத்திற்காக காட்டியும்கொடுத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை.ஏனென்றால் இவர்கள் அனைவரின் மனதிலுமே மதவெறி குடிகொண்டு இருப்பதே முக்கிய காரணம்.

இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் இயக்குனர் பாலா. இவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கக்கூடிய ''அவன்-இவன்'' என்ற படத்தில்,முஸ்லீம்களை இதுவரை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்த நிலை மாறி முஸ்லிம்களின் இறை வணக்கத்தை கையிலெடுத்துக்கொண்டு சீண்டியிருக்கிறார்.

இந்த படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை.நாம் படத்தையும் பார்க்கவில்லை. யூ டியூப் (You Tube) என்ற இணைய தளத்தில் வெளி வந்த ஒரு சிறிய பகுதியை பார்த்து விட்டு இதை எழுதுகிறோம் you tube link; http://www.youtube.com/watch?v=wyvEoVLKgeg&feature=player_embedded


இதில் வரும் ஒரு காட்சியில்,

ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.

அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.

பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!!
என்று கத்துகின்றான்.

இப்படி அந்த வசனம் அமைந்திருக்கிறது.

குர்பானி என்பது முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரண்டு பெரு நாட்களில் ஒன்றான ''பக்ரீத்''என்று சொல்லக்கூடிய ''தியாகத்திருநாள்'' அன்று பொருளாதார வசதி படைத்த முஸ்லிம்கள் ஆடு,மாடு,ஒட்டகம் போன்றவற்றை அறுத்து வசதி இல்லாத ஏழை மக்களும் அன்றையதினம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களுக்கும் அதன் இறைச்சியை வழங்கி சகோதரத்துவத்துடன் கொண்டாடப்படும் ஒரு இறை வணக்கமாகும்.

இதை கேவலப்படுத்தும் விதமாக படமெடுத்துள்ள இயக்குனர் பாலா இந்தக்காட்சியை உடனே நீக்குவதோடல்லாமல் அனத்து முஸ்லிம் மக்களிடமும் பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும்.
இனிமேல் முஸ்லிம்களை கேவலப்படுத்தும்படி யாரும் படம் எடுக்கக்கூடாது.

இந்தப்பிரச்சினையில் தமிழக அரசு உடனே தலையிட்டு படத்தில் அந்தக்காட்சியை நீக்கி வெளியிட ஆவண செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து முஸ்லிம் களையும் ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டி வரும் என இதன் மூலம் எச்சரிக்கை செய்கிறோம்.


''கீற்று'' என்ற இணையதளம் இந்த படத்திற்கான விமர்சனத்தை எழுதியுள்ளது அதில் ..(நன்றி...கீற்று)
 
.......1.மாடு உண்பதை அரசாங்கம் அனுமதிக்கிறதே. ஆட்டிறைச்சி விலையுடன் ஒப்பிடுகையில் ஏழைகளின் உணவு மாட்டிறைச்சி. அதை கண்டுபிடித்து அவ்வளவு பெரிய்ய குற்றம் போல ஆர்.கே .வை பிடித்து செல்ல அத்தனை அதிகாரிகள் வந்து... இதெல்லாம் எதற்காக... உடனே அவர் வெளியே வந்து கொலை செய்வதற்கு வசதியாகவா..? அவர் கேட்கிறார்...
குர்பானி என்கிற பெயரில் ஒட்டகத்தை அறுத்து உண்பவர்களை போய் கேட்க வேண்டியது தானே என்று. அது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை. அதைப் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் வலிய திணிக்கப் பெற்றாற்போல் இருக்கிறது.


படம் முடிகிறது........ a film by bala என்று பிசு பிசு வென கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் கசிகிறது. குதித்து குதித்து செல்லும் திரைக்கதை, நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள்,வலியத் திணிக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை, அருவருப்பான வசனங்கள், அதீத வன்முறை, மொத்தத்தில், அவன் இவன்... புறக்கணிக்கப்பட வேண்டிய கோரதாண்டவம்

--அ.அப்துல் வஹாப்..சேலம்..


No comments:

Post a Comment