islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சவூதி: மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு


சவூதி அரேபியாவின் மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள் செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ் அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது

பால் அருந்தினால் பலசாலி ஆகலாம்!



நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

உடல் தானம் செய்வதில் சேலம் முதலிடம்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணித் திறன் பயிற்சி: நாஸ்காம் – விப்ரோ கூட்டு முயற்சி


தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் பட்டதாரிகளுக்கு பணித் திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நாஸ்காம் அமைப்பும், விப்ரோ நிறுவனத்தின் மிஸ்ஸன் 10x அறக்கட்டளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

இன்ஃபோஸிஸின் இஸ்லாமிய ஃபோபியா


ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் விசாரித்தார்கள் என குற்றஞ்சாட்டி இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் ஹுஸைனின் 3 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

ஓசோன் ஓட்டையால் மழை அதிகரிப்பு




அண்டார்ட்டிக்கா பகுதியில் ஓசோன் மண்டலத்தில் உள்ள ஓட்டையினால் புவியின் தெற்குப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் மழையின் அளவு அதிகரித்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் கலவரம்: "துணைநின்றார் மோடி"




குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..

"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அ னைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!

அணு சக்தி வேண்டவே வேண்டாம்: 9 நோபல் அறிஞர்கள் வேண்டுகோள்


அணு மின்சாரம் மலிவானதோ, அணுமின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"விக்கி லீக்ஸின்' மறுபக்கம்: இன்று டிஸ்கவரி சேனலில் வெளியீடு


இணையதளத்தில் ரகசியங்களை அம்பலப்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் இணையதளம் தொடர்பான ஆவணப் படம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) வெளியாகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி சார்பில் மதுரையில் கல்விக் கண்காட்சி நாளை தொடக்கம்




தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்.23), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) ஆகிய இரு நாள்கள் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு: முத்தாலிக் மீது குற்றப்பத்திரிகை

குஜராத்தில் மோடிக்கு பின்னடைவு: காந்திநகர் மாநகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்!


குஜராத் மாநிலத்தில் தலைநகர் காந்திநகர் பகுதியை உள்ளடக்கிய மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிவிட்டது. இந்த வெற்றி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பெருத்த பின்னடைவு என்று கருதப்படுகிறது.

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி


ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்​களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.