islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ராம்தேவ் செயல்பாடுகள் குறித்து விசாரணை: திக்விஜய் சி்ங் கோரிக்கை


பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை நிறுத்திய தில்லி போலீசாரின் செயலுக்கு ஆதரவுதெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், 1994-ம் ஆண்டில் இருந்து அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை


பிரிட்டஷ் மகாராணியின் முடிசூட்டு ஞாபகார்த்த தின அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு குதிரை திடீரென நடை தடுமாறி இடறி விழுந்ததால் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராம் தேவ் உண்ணாவிரதம்: பந்தலுக்கு தீ வைப்பு-டெல்லிக்கு வெளியே ராம் தேவ்


கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக 04.06.2011 அன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் ‌‌போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது.

யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்


ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.

உ.பி.,யில் தனித்துப் போட்டி: பா.ஜ., அறிவிப்பு - ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது.



உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது. உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும், பா.ஜ., அறிவித்துள்ளது.

ராம்தேவ் மூலமாக மத்தியில் காவி ஆட்சியைக் கொண்டு வர சதி நடக்கிறது-கி.வீரமணி


ஊழலை ஒழிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி ராம்தேவ் போன்றவர்கள் மூலமாக மத்தியில் காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதைக் கூட புரிந்து கொள்ளாமல் இந்த காவிகளின் மிரட்டல்களுக்கு மத்திய அரசு பணிகிறது என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், வறுமையாலும் வாடும் வேளையில் ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணத்தை சம்பாதித்து வரும் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியான பாபா ராம் தேவின் ஹைடெக் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்ட நாடகம் இன்று டெல்லியில் துவங்கியுள்ளது.

எண்ணங்கள், சொற்கள் மூளையில் எங்கிருந்து உருவாகின்றன! கண்டு பிடித்து அசத்திய விஞ்ஞானிகள்


மனித மூளையில் சொற்களின் வடிவங்களுக்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசமான அங்கவீனம் காரணமாகப் பேச முடியாமல் இருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் இது உதவக் கூடிய வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அமரும் தங்க நாற்காலியின் மதிப்பு 2.2 கோடி!!


கர்நாடக சுற்றுலா மற்றம் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி தங்க நாற்காலியில் தான் அமருகிறார். அந்த தங்க நாற்காலியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 2.2 கோடி. கர்நாடக சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி லோக் அயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது சொத்து விபர அறிக்கையில் பல்வேறு முக்கிய விபரங்களை தெரிவித்து இருக்கிறார்.

வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாள்கள் பல கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் அவர்களது பெற்றோர்களும் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரிகளை மொய்த்து வரும் காலம் இது. வீடுகள் தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'


நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

நாயின் விலை ரூ.6,91,21,690


கோடிக்கணக்கான மக்கள் கையில் காசில்லாமல் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இல்லையென்றால் ஒரு நாயை 6 கோடியே 91 லட்சத்து, 21 ஆயிரத்து, 690 ரூபாய் கொடுத்து வாங்குவாரா ஒருவர்?

பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி: காங்கிரஸ் தாக்கு


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ள பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

விஞ்ஞானத்தின் வாலில்...



சாத்தான் ஓதும் வேதம் - ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி


ஊழலுக்கும், கறுப்பு பண பதுக்கலுக்கும் எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தம் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி ஆகும்.

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் பதஞ்சலி யோகாபீட அறக்கட்டளையின் கீழ் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. தனது யோகா வகுப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அஸ்தா டி.வி என்ற தொலைக்காட்சி சேனலும் இந்த யோகா குருவுக்கு சொந்தம்.