islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.




இந்தியாவில் தேடப்பட்டு வரும் முக்கியமான பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

அமெரிக்கா -அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது




அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள், நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச்சூறாவளிக்கு இன்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை, 200ஐ தாண்டி விட்டது.

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல



இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

நாக்கை அறுத்துக் கொண்டவருக்கு அரசுப் பணி


தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றால் தனது நாக்கை அறுத்துக்கொள்வதாக வேண்டிக்கொண்டு அந்த பிரார்த்தனையை நிறைவேற்றிய ஒரு பெண்மணிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா மதிய உணவுத்திட்ட உதவியாளராக நியமித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,049 பேர் ஹஜ் பயணம்



தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,049 பேர் புனித ஹஜ் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நுழைவுத்தேர்வு:கேரளாவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து முஸ்லிம் மாணவர்கள் சாதனை



கேரள மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் 77,335 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை முஸ்லிம் மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

'நடிகர்' சச்சினுக்கு வரிச் சலுகை -வருமானவரித் துறையின் 'அபார' லாஜிக்



நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.

குஜராத் இனப்படுகொலை:உண்மையை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் அமீத் ஷா முயன்றார்-சஞ்சீவ் பட்



கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நரந்திரமோடி கூட்டிய உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற விபரத்தை சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)முன்பாக ஆஜராகி வெளியிடுவதை தடுக்க குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா முயன்றார் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித்:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் படி நடவடிக்கை இல்லை


ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ புதிய வழக்கை பதிவு செய்யாது. உள்துறை அமைச்சக அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் நடத்திய சந்திப்பில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கோத்ரா:குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல் முறையீடு


கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீவைப்பு வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 31 பேர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

எம்பிஏ, எம்சிஏ வகுப்பில் சேர 28ல் நுழைவுத்தேர்வு துவக்கம்


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

ஐஐடி, ஐஐஎம் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்


இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி இல்லை ; பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது; தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு



இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் , இது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு


ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசியத் தலைவரின் புதிய தம்பிகள்



தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிராபாகரன் அவர்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த துரோகங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது.