islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தி.மு.கவுக்கு ஓய்வு


தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் மீறி தி.மு.க மோசமான தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மக்கள் தி.மு.கவுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 69 பேர் பலி



வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள துணை நிலை ராணுவ பயிற்சி மையத்தில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 69 பேர் இறந்தனர் என பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இல்லை: ஜெயப்பிரகாஷ் காந்தி


தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்காது. எனவே மாணவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கே முன்னுரிமை தரலாம் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

எம்.பி.பி.எஸ்.: பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டா?



தமிழகத்தில் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் கபடவேடம்:பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் தீர்வு காணப்போகிறாராம்


சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்த சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரி, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்


வருடம் தோறும் உணவு உற்பத்தியில் 1.3 பில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக ஐ.நா.,வீன் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) கூறியுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவே கிடைத்து வரும் இயற்கை வளங்களே உள்ளதால், உணவு வீணாவதை குறைக்க வேண்டும்.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2011


அண்மையில் மார்ச் 31-ஆம் தேதி அன்று 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக அறிக்கை வெளியிடப்பட்டது. அவை நாளிதழ்களில் சிறிய அளவிலான செய்திகளுடன் வெளிவந்தன. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை விரிவாக வாசகர்களுக்கு தரவேண்டுமென எண்ணினோம். அதன்படி 2011 கணக்கெடுப்பை முழுமையாக ஆய்வு செய்து இக்கட்டுரையில் வெளியிட்டுள்ளோம்.

ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்



சீனாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு விவசாயத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.

பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்


இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 மதிப்பெண் வரை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?



தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணர்களிடையே எழுந்துள்ளது.

உலகின் நம்பர் 1 பயங்கரவாதி!



இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான்.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 5 (அரபியர்களின் சமய நெறிகள்)



நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர்.

ஜூன் 5ல் ஜிப்மர் நுழைவுத் தேர்வு: 37,731 பேர் எழுதுகின்றனர்


ஜிப்மர் பொது நுழைவுத்தேர்வு, ஜூன் 5ல் நடக்கிறது. இத்தேர்வை, நாடு முழுவதும், 12 மையங்களில் இருந்து, 37 ஆயிரத்து, 731 பேர் எழுதுகின்றனர்.

25ஆ‌ம் தே‌தி ‌பிள‌ஸ் 2 ம‌தி‌ப்பெ‌ண் சா‌ன்‌றித‌ழ்க‌ள்


பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும் எ‌ன்று‌ம் தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று‌ம் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடும் போட்டி!!!

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் போட்டி:




தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.  பிளஸ் 2 தேர்வு முடிவில் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 மதிப்பெண்ணை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக 120 மாணவர்கள் பெற்றுள்ளனர். பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்தவரை, 200-ல் தொடங்கி, ஒவ்வொரு கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். அதாவது, 200-க்கும் 199 கட்-ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாக 1,174 மாணவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 199-ஐக் காட்டிலும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 565 அதிகம்.  ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐ இந்த ஆண்டு 2,717 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  சிறந்த கல்லூரிகளில்... பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட சிறந்த கல்லூரிகளில் மிக அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கே விரும்பிய பொறியியல் படிப்புப் பிரிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.