islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடும் போட்டி!!!
பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் போட்டி:
தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவில் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 மதிப்பெண்ணை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக 120 மாணவர்கள் பெற்றுள்ளனர். பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்தவரை, 200-ல் தொடங்கி, ஒவ்வொரு கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். அதாவது, 200-க்கும் 199 கட்-ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாக 1,174 மாணவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 199-ஐக் காட்டிலும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 565 அதிகம். ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐ இந்த ஆண்டு 2,717 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த கல்லூரிகளில்... பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட சிறந்த கல்லூரிகளில் மிக அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கே விரும்பிய பொறியியல் படிப்புப் பிரிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மலைக்காட்டின் அதிசயப் பறவை!
நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகப் பயணம் செய்யும் போது பார்க்கக்கூடிய அரிய பறவைகள் இருவாச்சிப்பறவைகள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. ஆங்கிலத்தில் ஹார்ன்பில் என்று அழைக்கப்படுகிறது. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே காஸ்க் எனப்படும் கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும்.
இந்தியாவையும் சீனாவையும் தொழில்நுட்பத்தில் வளர விடக்கூடாது - ஒபாமா!
"இந்தியா மற்றும் சீனாவிலிருந்து புதிய தொழில் நுட்பங்கள் வருவதையும் அதில் அவர்கள் வளருவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றதுமுதல் அவரது நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களாக இந்தியர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)