தில்லியில் நடந்த ஐந்தாவது எம்.சி. சீதல்வாட் நினைவுச் சொற்பொழிவின்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள்வரை உள்ள அத்தனை நீதிபதிகளும் கவனத்தில்கொள்ள வேண்டிய, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள். அவர் தெளிவுபடுத்தி இருப்பதுபோல, ஒவ்வொரு நீதிபதியும் சட்டத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியைச் சரியாகவும் துல்லியமாகவும் புரிந்துகொண்டு விட்டால், பிறகு நீதிமன்றம் வரம்பு மீறுகிறது என்கிற குற்றச்சாட்டோ, நிர்வாகத்துக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயமோ ஏற்படாமல் தவிர்க்கலாம்.
islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
நிலைதடுமாறாத நீதிபதி!

குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!
“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”
Subscribe to:
Posts (Atom)