islam
▼
ஆபாச இணையதளங்களுக்கு அடிமையான அதிகாரிகள்:பொதுப்பணித்துறைக்கு 62 ஆயிரம் ரூபாய் பில்
ஹரியானா மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ வசதிகளை துஷ்பிரயோகம் செய்து ஆபாச இணையதளங்களை பார்வையிட்டதன் விளைவாக 62 ஆயிரம் ரூபாய் இணையதள கட்டணத்திற்கான பில் வந்துள்ளது.
பொதுப்பணித்துறைக்கு கீழ் செயல்படும் ஸிர்ஸா அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு இடையே இவ்வளவு தொகை பில் வந்துள்ளது. அரசு அதிகாரிகள் இணையதளத்தில் ஆபாச வீடியோக்கள், படங்களை டவுன்லோடு செய்துள்ளனர்.
இச்செயலை புரிந்த அதிகாரிகளிடமே இத்தொகையை வசூலிக்க மேலதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கணினி வல்லுநர் ஒருவரை நியமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவு பணியில் ஈடுபடுவோர் தாம் இணையதளத்தை துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான் இணையதள பில் வரும். ஆனால் இம்முறை 50 ஆயிரத்தை தாண்டிய பொழுது ஏதோ முறைகேடு நடந்துள்ளது தெரியவந்ததாக ஹரியானா ரோட்வேஸ் பொது மேலாளர் லஜ்பத் ராய் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment