islam

ஐ.சி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு


நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பில் தென்மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகபட்சமாக 99.72 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேற்கு மண்டலம் 99.63 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

அதேபோல 12-ம் வகுப்பில் தென்மண்டலம் 98.28 சதவீதமும், மேற்கு மண்டலம் 97.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக பத்தாம் வகுப்பில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி 0.13 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.சி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 1,22,347 மாணவர்களும், 12-ம் வகுப்பு தேர்வை 57,487 மாணவர்களும் எழுதினர்.

No comments:

Post a Comment