islam

இந்தோனேசிய மசூதியில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா நகரில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 17 பேர் காயமடைந்தனர் என இந்தோனேசிய போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென குண்டுவெடித்ததாக போலீஸ் அதிகாரி அடீஸா செம்பிரிங் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்புக்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை.

குண்டுவெடிப்பை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிசெய்தார். எனினும் விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
dinamani

No comments:

Post a Comment